உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி சக்தி காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

சின்னாளபட்டி சக்தி காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

சின்னாளபட்டி: கீழக்கோட்டையில் சக்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்  நேற்று (செப்., 16ல்) நடந்தது.

விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில், இரு கால யாக  பூஜைகள் நடத்தப்பட்டன. கடம் புறப்பாடு, விசஷே ஆராதனையுடன் கும்பத்தில்  புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை  நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம், கலைநிகழ்ச்சிகளில், சுற்றுவட்டார  பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்

* வடமதுரை: மோர்பட்டியில் மதுரைவீரன், பட்டவன் சீலக்காரி அம்மன் கோயில் கும்பாபி ஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் (செப்., 15ல்) மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு, கண பதி பூஜையுடன் துவங்கிய விழாவில்  முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று 16ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகள் முடிந்ததும், கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி  கும்பாபிஷேகம் நடந்தது.வடமதுரை மங்கம்மாள் கேணி பக்த ஆஞ்சநேயர்  கோயில் அர்ச்சகர் நாராயணன் அய்யங்கார் கும்பாபிஷேகத்தை நடத்தி  வைத்தார். சுற்றுப் பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !