உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி அருகே வரதராஜ பெருமாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

தேனி அருகே வரதராஜ பெருமாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

தேனி : தேனி அருகே பூதிப்புரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரஜாபிதா  பிரம்ம குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வ வித்யாலயா தேனி கிளைய நிலையம்  சார்பில், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

கிளை பொறுப்பாளர் சகோதரி விமலா, ”ராஜயோக தியானம் கற்றுக் கொள்வதினால் பண்புகள் வளர்கின்றன. மனது, புத்தியை ஒருநிலைப்படுத்தி இறைவனை நினைவு செய்ய முடியும். கடவுளிடம் நாம் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி உள்ளிட்டவைகளை கேட்கின்றோம். நாம் ராஜாவாக மாறி மனதை ஆட்கொள்ள வேண்டும்.”, என்றார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !