மூவர் வசிக்கும் அரசமரம்
ADDED :4904 days ago
அரச மரம் வழிபாட்டுக்குரிய மரமாகும். அரச மரத்தின் தென் பாகத்தில் மகேஸ்வரனும், உச்சிப் பாகத்தில் மகாவிஷ்ணுவும், வடபாகத்தில் பிரம்மாவும், வேர்ப் பாகத்தில் இந்திரனும், மத்திய பாகத்தில் அக்னி தேவரும், கிளைகளில் கோமாதாவும் உள்ளனர். அரச இலைகளில் முனிவர்களும், அடிவேர்களில் நான்கு வேதங்களும், மரப்பாலில் அக்னி ஹோமமும், மரத்தைச் சுற்றிலும் புண்ணிய நதிகளும் வாசம் செய்வதாக ஐதீகம்.