உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாத தேங்காயை என்ன செய்ய வேண்டும்?

பிரசாத தேங்காயை என்ன செய்ய வேண்டும்?

வீட்டுச் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். வழிபாட்டில் படைக்கும் நிவேதனத்துடன் சேர்க்க இயலாது. திருமணம் போன்ற சடங்குகளில் சமைத்த பொருளை வரவழைத்து உண்ணும் நமக்கு நெருடல் வருவதில்லை. முன்னோர் ஆராதனையில் சமைத்த பொருளை ஏற்பதில் சங்கோஜம் இல்லை. சமைத்த பொருளை வரவழைத்து விசேஷ பூஜையில் நிவேதனம் செய்வது உண்டு. அப்படியிருக்க, பிரசாதப் பொருளை ஏற்பதில் ஏன் தயக்கம்? பிரசாதப் பொருளைக் கலந்து சமைப்பது, சமையலில் தூய்மை அளிக்கும். வீட்டில் பூஜையில் நிவேதனம் செய்ய அதைப் பயன்படுத்தக்கூடாது. ஏற்கெனவே ஒருதடவை நிவேதனமாக ஒரு பொருளைக் கலந்தால், அந்தப் பொருளுக்கு மீண்டும் நிவேதனம் செய்வதற்கான தகுதி அற்றுவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !