உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேர்மை உன்னைக் காப்பாற்றும்

நேர்மை உன்னைக் காப்பாற்றும்

* நேர்மைக்கு அழிவில்லை. அது  உன்னைக் காப்பாற்றும்.  
* மனிதனுக்கு கட்டுப்பாடு அவசியம். இல்லாவிட்டால் விலங்காக மாறி விடுவர்.
* சிறிய லட்சியத்தில் வெற்றி பெறுவதை விட, பெரிய லட்சியத்தில் தற்காலிக தோல்வி அடைவது மேலானது.
* கடவுளை நோக்கி மனதை திருப்பு. மற்றதை அவனே பார்த்து கொள்வான். எல்லாம் அவன் கைகளில் தான் இருக்கின்றன.
* எல்லா உயிர்களையும் ஒன்று போலவே நேசிக்கிறார் கடவுள். ஆனால் மனம் இருண்டு கிடந்தால் கடவுளை உணர முடியாது.
* மனிதன், தாவரம், விலங்கு உள்ளிட்ட எல்லா உயிர்களிலும் அன்பு இருக்கிறது. கல், மண்ணிலும் கூட அன்பு இருக்கிறது.
* பிறரது குற்றம், குறைகளை பெரிதுபடுத்தினால் நன்மை விளையாது. மனம் அமைதியாக இருக்க பிறரிடம் உள்ள நிறைகளை மட்டும் பார்.
* உன் தேவையை நிறைவேற்ற இறையருள் காத்திருக்கிறது. அதனால் எதைக் கண்டும் பயப்படத் தேவையில்லை.  
* கீழான மனிதர்களிடம் பேசினாலும், அவர்களின் அருகில் நின்றாலும் விஷத்தன்மை தொற்றி விடும்.
* அன்றாட வாழ்க்கையை சிலர் சிக்கலாக்கி கொள்கின்றனர். அவர்கள் பிரச்னைக்கான மூல காரணத்தை அறிவதில்லை.
* எண்ணம், சொல், செயல் அனைத்தும் கடவுளை நோக்கியே இருக்கட்டும். - தெளிவுபடுத்துகிறார் ஸ்ரீ அன்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !