உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நகரி தேசம்மன் கோவிலில் இரு மாதத்தில் ரூ.6, 73, 371 காணிக்கை

நகரி தேசம்மன் கோவிலில் இரு மாதத்தில் ரூ.6, 73, 371 காணிக்கை

நகரி:தேசம்மன் கோவில் உண்டியலில், இரண்டு மாதத்தில், பக்தர்கள், 6 லட்சத்து, 73 ஆயிரத்து, 371 ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில், தேசம்மன் கோவில் உள்ளது. இக்கோவி லுக்கு, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்து செல்கின்றனர். ஆடி மற்றும் ஆவணி மாதத்தில் மட்டும், ஒன்றரை லட்சம் பக்தர்கள் மூலவர் தேசம்மனை தரிசித்து உள்ளனர்.

பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கோவில் சேர்மன் கிருஷ்ணாரெட்டி, செயல் அலுவலர் ரவீந்திரராஜு ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.இதில், 6 லட்சத்து, 73 ஆயிரத்து, 371 ரூபாய் ரொக்கம், 29 கிராம் தங்கம், 152 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !