உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரோக்கியமாக வாழ குழந்தைகளை தூக்கி வீசும் வினோத திருவிழா!

ஆரோக்கியமாக வாழ குழந்தைகளை தூக்கி வீசும் வினோத திருவிழா!

பெங்களூரு :குழந்தைகள் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களை தூக்கிவீசும் வினோதமான நேர்த்திக்கடன், கர்நாடக மாநிலம், பகல்காட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து தூக்கி வீசுமாறு கேட்டுக் கொண்டனர். பகல்காட்டில் உள்ள கோவில் ஒன்றில், ஒவ்வொரு ஆண்டும் விழா நடைபெறுவது வழக்கம். அப்போது, அங்கு கூடும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் பூசாரியிடம் சென்று, தங்கள் குழந்தைகளைத் தூக்கி வீசுமாறு கேட்டுக் கொள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களை மறந்து புடைசூழ, தேர் மீது நின்ற நிலையில், குழந்தையை, தூக்கி வீசுவார் பூசாரி. அந்தரத்தில் பறந்து வரும் குழந்தைகள், அதன் பெற்றோர்கள் விரிக்கும் துணி விரிப்பில் வந்து விழுவர். முதலில், தங்களது குழந்தைகளைத் தான் தூக்கிவீசவேண்டும் என, பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு பூசாரியிடம் மன்றாடுவர். குழந்தைகளை இவ்வாறு தூக்கி வீசுவதால், அவர்கள் நோய்நொடியின்றி, ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது, அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த நிகழ்ச்சிக்குப்பின், கோவில் வளாகத்திலிருந்து ÷ஷாபா யாத்திரையை துவங்கும் பூசாரி, அப்பகுதி கிராமங்களில் வலம் வந்து, விழாவை நிறைவு செய்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !