கரூரில் சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை
ADDED :2219 days ago
கரூர்: சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகளின், 58வது மஹாபரணி குருபூஜை விழா, தீயணைப்பு துறை அலுவலக வளாக கோவிலில் நேற்று 18ல் நடந்தது.
அதில், 108 தீர்த்தங்கள் மூலம் மூலவருக்கு மஹா அபிஷேகம், ஒன்பது விதமான ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து, நெரூர் அமர்நாத் சுவாமிகள், புலிப்பாணி பாத்திர சுவாமிகள் ஆன்மிக உரையாற்றினர். அதன் பின் நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிறகு, பக்தியிலும், பண்பாட்டிலும் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில், பாட்டு மன்றம் நடந்தது.