உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி அருகே உமையநாயகி அம்மன் கோயிலில் வடமாடு எருதுகட்டு விழா

சாயல்குடி அருகே உமையநாயகி அம்மன் கோயிலில் வடமாடு எருதுகட்டு விழா

சாயல்குடி : சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி உமையநாயகி அம்மன் கோயிலில்  வடமாடு எருதுகட்டு விழாநடந்தது.எஸ்.தரைக்குடி, செவல்பட்டி, வாலம்பட்டி,  முத்துராமலிங்கபுரம் ஆகியநான்கு கிராம நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட  இக்கோயிலில் கடந்த செப். 10 ல் காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது.

கொடியேற்றம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம்சுற்றுவட்டார 18 பட்டி கிராம  மக்களும் உலக நன்மை வேண்டி கூட்டுப் பொங்கலிட்டனர்.உமையநாயகி  அம்மனுக்குசிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, கோயில் முன்  கோலாட்டம், முளைப்பாரி, அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது.கோயில் முன்புள்ள  விளையாட்டுத் திடலில் வடமாடு எருதுகட்டு விழாவை சாயல்குடி ஜமீன்தார்  சிவஞான பாண்டியன் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து 14 காளைகள் விடப்பட்டது. காலை 10:00 முதல் மாலை  5:00 மணி வரை நடந்தது. 9 வீரர்கள் கொண்ட குழுவினர் அடக்கினர். காளையின்  கழுத்தில் 20 அடி நீள கயிற்றி வடம் சுற்றப்பட்டது. 20 நிமிடத்திற்குள் காளையை  அடக்கிய வீரர்களுக்கு பித்தளை பாத்திரம், ரொக்கப்பணம், பீரோ உள்ளிட்ட  பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !