உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு செல்வ விநாயகர் கோவிலில் சம்பஸ்ரா பூஜை

நடுவீரப்பட்டு செல்வ விநாயகர் கோவிலில் சம்பஸ்ரா பூஜை

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் செல்வ விநாயகர் கோவிலில் சம்பஸ்ரா பூஜை  நடந்தது. சி.என்.பாளையம் பழையபாளையம் தெருவில் உள்ள செல்வவிநாயகர்  கோவிலில் கும்பாபி ஷேகம் நடந்து ஒராண்டு நிறைவை முன்னிட்டு சம்பஸ்ரா  பூஜை நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் 17ம் தேதி மாலை 5:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமம்  நடந்தது.இரவு 7:00 மணிக்கு யாக வேள்வியில் வைத்திருந்த கலசங்கள் ஆலய  உலாவாக வந்து செல்வவிநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.  7:30 மணிக்கு செல்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !