வரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்
ADDED :2310 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு,200 கிலோ பூக்களை ஏராளமான பெண் பக்தர்கள் மாலையாக தொடுத்தனர். கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்தனர். மூலவர் திருப்பதி திருவேங்கடமுடையான் அலங்காரத்திலும், உற்சவர் கருடவாகனத்திலும் காட்சியளிக்கின்றனர். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.