நத்தம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை விழா
ADDED :2568 days ago
நத்தம் : நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கார்த்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள்பொடி, புஷ்பம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.