உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் ராமசாமி கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்கம்

திருப்பூரில் ராமசாமி கோவிலுக்கு சிறப்பு பஸ் இயக்கம்

திருப்பூர்:’புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, ராமசாமி கோவிலுக்கு சிறப்பு  பஸ் இயக்கம் துவங்கும்,’ என, போக்குவரத்து துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.இன்று 21ல், முதல் புரட்டாசி சனிக்கிழமை என்பதால், பொங்கலுார்  அருகிலுள்ள ராமசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்காக,  சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது.

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவில்வழி வழியாக கோவில்பாளையம் (அவிநாசிபாளையம்) ராமசாமி கோவிலுக்கு சிறப்பு பஸ்  இயக்கப்படுகிறது.திருப்பூரில் இருந்து, 20, காங்கயத்தில் இருந்து, 10. பல்லடத்தில்  இருந்து, 15 பஸ் இக்கோவிலுக்கு வந்து செல்ல உள்ளது.பல்லடத்தில் இருந்து  காங்கயம், கரூர், திருச்சி செல்லும் சர்வீஸ், பாயின்ட் டூ பாயின்ட் தவிர, டவுன்  பஸ்கள் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !