உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா

வெள்ளகோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா

வெள்ளகோவில், சோளீஸ்வரசுவாமி திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக பைரவர்க்கு திருமஞ்சனம், மஞ்சள் தூள், பால், தயிர், சந்தனம், திருநீறு, இளநீர், கனி வர்க்கம், கரும்புச் சாறு, உட்பட 32 வகையான திரவிய அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது .கால பைரவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கால பைரவர் வழிபாட்டு குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !