பெருமாள் இடக்கையில் சக்கரம்!
ADDED :2239 days ago
காஞ்சிபுரம் மணிமங்கலத்தில் ராஜகோபால சுவாமி, செங்கமலவல்லித் தாயாருடன் கோயில் கொண்டுள்ளார். இங்கே, பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது, அபூர்வ திருக்கோலமாகும். சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் உள்ள பாண்டுரங்கன் கோயில். பண்டரிபுரத்தில் உள்ள கோபுர அமைப்போடு திகழ்கிறது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஒரு காதில் குண்டலமும் மறு காதில் தோடும் அணிந்து காட்சியளிப்பது விசேஷ அம்சமாகும். அம்பாசமுத்திரம் கோயிலில் உள்ள வேணுகோபாலன் சிலை, நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜயந்தியன்று இங்குப் பெருமாளுக்குத் கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்கள் நடைபெறுகின்றன.