உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம்!
                              ADDED :4956 days ago 
                            
                          
                          
காளையார்கோவில்: உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. பங்குனி உற்சவ விழா மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் விரதமிருந்து பறவைக் காவடி,மயில்காவடி,தீச்சட்டியேந்தி, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அம்மன் தேருக்கு எழுந்தருளினார். 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது இன்று தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெறும். காளையார்கோவிலிருந்து உருவாட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவஸ்தானம்,உருவாட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.