மவுனசாமி மடத்தில் பவுர்ணமி வழிபாடு!
கும்பகோணம்: கும்பகோணம் மவுனசாமி மடத்தில் நாளை 6 ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு, வலம் வரும் கழ்ச்சி நடைபெறவுள்ளது. கும்பகோணத்தில் வாழ்ந்த மவுனசாமி பல ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்தார். அவர் சமாதிஅடைந்த இடத்தில், மவுனசாமியோடு இருந்து தொண்டுபுரிந்த சீடர்கள் அருணாசலசுவாமிகள், ஜட்ஜ் சுவாமிகள், கன்றுகுட்டி சுவாமிகள், காமாட்சி அம்மை யார் ஆகியோரது ஜீவசமா திகளும் அந்த இடத்தில் உள்ளது. இதையடுத்து அந்த இடத்தில் மடம் ஒன்று கட்டப் பட்டு மவுனசாமி மடம் என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மடத்திற்கு காஞ்சி பெரியவர், சுவாமி விவேகா னந்தர், முத்து ராமலிங்க தேவர், வாடிப்பட்டி சொக்கையா சுவாமிகள், கிருபானந்த வாரியார் சுவாமிகள், வேதாத்திரி மகரிஷி, ஆற்காடு நவாப், அன்னி பெசன்ட் அம்மையார், சத்குரு சச்சிதானந்தசாமி ஆகியோர் வந்து வணங்கியுள்ளர். இத்தகைய சிறப்பு பெற்ற மவுனசாமி மடத்தில் வரும் 6 ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு ஜீவசமாதி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு தேனாபிஷேகம் செய்து, நாகாபரணம் அணியப் படவுள்ளது. தொடர்ந்து தீபார தனையும், அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. அதை யடுத்து பக்தர்களின் னைத்த காரியம் கைகூட மவுனசாமி மடத்தினை வலம் வரும் கழ்வும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை மடத்தின் சார்பில் வைத்தியநாதன், ஆறுமுகசாமி, நல்லாசிரியர் பாலசுப்பிரமணியன் செய்து வருகின்றனர்.