நடராஜர் சிலை கோயிலில் ஒப்படைப்பு
ADDED :2223 days ago
திருநெல்வேலி: நெல்லை, கல்லிடைகுறிச்சியில் உள்ள , குலசேகரமுடையார் கோவிலில், 1982 ல் இருந்த , ஐம்பொன்னாலான நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு சென்னை கொண்டு வந்தனர். தொடர்ந்து கோர்ட் உத்தரவின் பேரில், கோயிலில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். சிலைக்கு, பக்தர்கள், வழிபாடு செய்தனர். 24 மணி நேரமும் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.