உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை தெரசாள் ஆலய திருவிழா

மானாமதுரை தெரசாள் ஆலய திருவிழா

மானாமதுரை : மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலய 56ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவில் பங்கு பணியாளர் பாஸ்டின் தலைமையில் இளையான்குடி பங்கு பணியாளர் அருள் தாஸ் கொடியேற்றி வைத்தார். அன்னையின் தேர்பவனியும், திருப்பலியும் நடந்தது. மதுரை ஆர்.சி.,பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ்பிரபு இறை செய்தி வழங்கினார். தெற்குசந்தனுார். வண்ணான்ஓடை,மூங்கில்ஊரணி,உள்ளிட்ட பல பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் சிறப்பு திருப்பலிகளும், வரும் 30ம் தேதி தேர்ப்பவனி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பங்கு பணியாளர்களும்,பேரவை உறுப்பினர்களும்,அருட்சகோதரிகளும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !