மானாமதுரையில் செப்.29ல் நவராத்திரி விழா
ADDED :2288 days ago
மானாமதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்த வல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 வருடங்களாக கோயில் கும்பாபிஷேக பணி நடைபெற்று வந்ததால் நவராத்திரி திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததால் இந்தாண்டு நவராத்திரி விழா வருகிற 29 ந் தேதி நடைபெற உள்ளது.
விழாவின் போது அம்மன் மகிஷாசுரமர்த்தினி,மகாலெட்சுமி,சரஸ்வதி,சிவபூஜை செய்தல் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகளும், அர்ச்சகர்களும் செய்து வருகின்றனர்.