காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவிலில் 29ல் நவராத்திரி விழா
ADDED :2288 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழா, வரும், 29ம் தேதி துவங்குகிறது.காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும், நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு, வரும், 29ம் தேதி, இவ்விழா துவங்குகிறது.
இதை முன்னிட்டு, தினமும் இரவு, நவராத்திரி மண்டபத்தில், அம்மன் எழுந்தருள்வார். அக்., 6ம் தேதி, சூரசம்ஹாரம் நிறைவடைகிறது.கோவில் நவராத்திரி மண்டபத்தில், பிரபல சங்கீத வித் வான்கள் பங்கேற்கும் இன்னிசை கச்சேரி, இரவில் நடைபெறும். அக்., 10ல், நவராத்திரி நிறைவு பெறுகிறது.