திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் பயன்பாட்டுக்காக பேட்டரி கார்!
திருவண்ணாமலை: பங்குனி உத்திரத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் காவடி ஏந்தி ஊர்வலமாக மாட வீதி வலம் வந்தனர். பக்தர்கள் பயன்பாட்டுக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி கார் சேவை துவக்கி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக, பேட்டரி கார் சேவை துவங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசு, அந்த கோரிக்கையை பரிசீலனை செய்து, இந்து அறநிலையத்துறை சார்பில், நான்கு லட்ச ரூபாய் மதிப்பில், பேட்டரி கார் சேவை துவங்க அனுமதி அளித்ததையடுத்து, இன்று அந்த சேவை துவங்கியது. இந்த காரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் இலவசமாக கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விரைவில் கூடுதல் கார் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.