உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு கோவில்களில் காவலர் பணி: படைவீரர்களுக்கு அழைப்பு

ஈரோடு கோவில்களில் காவலர் பணி: படைவீரர்களுக்கு அழைப்பு

ஈரோடு: இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிக்க, மாஜி படை வீரர்களுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டு ள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும், ஈரோடு  மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், இரவு காவலர் பணியிடங்கள்  காலியாக உள்ளன.

இதில் முன்னாள் படைவீரர்களை நியமனம் செய்யப்படவுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 62 வயதுக்குள் உள்ள, ஆரோக்கியமான, விருப்பமுள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம். அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, எழுத்து பூர்வமான விருப்ப விண்ணப்பத்துடன், ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !