உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி கோவிலில் நவராத்திரி விழா

வடபழநி கோவிலில் நவராத்திரி விழா

சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, நாளை (செப்., 29ல்) கோலாகல மாக துவங்குகிறது.

வடபழநி ஆண்டவர் கோவிலில், நீண்ட இடைவெளிக்கு பின், நவராத்திரி விழா,  விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாளை செப்., 29ல் முதல், அக்., 8ம் தேதி வரை, ’சக்தி கொலு’ எனும் பெயரில், கொலு வைக்கப்படுகிறது.

விழா நாட்களில், தினமும் காலை, 11:00 மணி முதல், 11:30 மணி வரை, லலிதா  சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. மாலை, 5:30 மணி முதல் மாலை, 6:00 மணி  வரை, வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடக்கிறது.அதைத்  தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாம
பாராயணம் நடக்கிறது.

காலை, 11:30 மணிமுதல், 12:00 மணி வரையிலும், மாலை, 6:30 மணி முதல்,  7:00 மணி வரை யிலும், சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது.தினமும் மாலை,  4:00 முதல், 6:00 மணி வரை, இசை கச்சேரி நடக்கிறது. இரவு, 7:00 மணி  முதல், 7:30 மணி வரை, பக்தர்களின் கொலு பாட்டும், பல்வேறு தலைப்புகளில்,  அறிஞர்களின் சொற்பொழிவும் நடக்கிறது.

நவராத்திரி சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு, அக்., 4ம் தேதி காலை, 7:30 மணி முதல், 12:30 மணி வரையிலும், மாலை, 4:30 மணி முதல், 8:30 மணி வரையிலும், ஏகதின லட்சார்ச் சனை நடக்க உள்ளது. இதற்கு கட்டணமாக, 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்புவோர், கோவிலில் கட்டணம் செலுத்தி, ரசீது பெற்றுக்  கொள்ளலாம்.   நவராத்திரியின் நிறைவு நாளான, அக்., 8ம் தேதி, ’வித்யாரம்பம்’  எனும் நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை  நடக்கிறது. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள  குழந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை துவக்கும் நிகழ்வு நடக்க  உள்ளது.நவராத்திரி விழா நாட்களில், பக்தர்கள் வருகை தந்து, சிறப்பு பூஜை,  நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் கோரிஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !