பழநி நவராத்திரி விழா துவக்கம்: அக்.8ல் சூரன்வதம்
ADDED :2224 days ago
பழநி: பழநியில் நவராத்திரி விழா செப்.,29 முதல் அக்.,8 வரை நடக்கிறது. பெரிய நாயகியம்மன் கோயிலில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் காப்புக்கட்டுதல் நடந்தது.
திருஆவினன்குடி, மலைக்கோயிலில் உச்சிகால பூஜையில் மூலவர் மற்றும் சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்களுக்கு காப்புக்கட்டுதல் நடந்தது.போகர் ஜீவசமாதியில் காப்புக்கட்டி, புவனேஸ்வரியம்மன் அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்திற்கு எழுந்தருளினார். அக்.,8 விஜயதசமி அன்று மகிஷாசூரன் வதம் நடக்கிறது. அன்று பகல் 2:30 மணிக்குமேல் மலைக்கோயிலில் இருந்து வேல் புறப்படுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணைஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.