சவுடாம்பிகை கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
ADDED :2228 days ago
போடி: நவராத்திரி திருவிழா துவக்கத்தை முன்னிட்டு, போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயிலில் மகேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தாய் ஸ்தலம் தேவாங்கர் ஜாதி பொதுமை தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் கொலு வைக்கப்பட்டு மகளிர் மூலம் பஜனை நடந்தது. குலாலர் பாளையம் காளியம்மன் கோயில், மேலத்தெரு சவுடம்மன் கோயில், போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.