உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துள்ளுமாரியம்மன் கோயிலில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

துள்ளுமாரியம்மன் கோயிலில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

விருதுநகர்: விருதுநகரில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு துள்ளுமாரியம்மன் கோயிலில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு அணியம் விஷேசம் நடந்தது.  விருதுநகர் பாண்டியன்நகரில் அமைந்துள்ள துள்ளுமாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி 10 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறது. 6 வது நாளான நேற்று கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு அணியும் விஷேசம் நடந்தது.  இதில் நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் உள்ளூர்பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பங்கேற்றனர். 8ம் நாளான நாளை பொங்கல் திருவிழா நடக்கவுள்ளது. 9ம் நாளில் அக்கினிசட்டி, ரதம் இழுப்பது உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !