மதுரையில் சமணர் கண்காட்சி
ADDED :2229 days ago
மதுரை:மதுரை சுமநிநாத் ஜெயின் நயா மந்திர் அறக்கட்டளை சார்பில் உலக பாவ மன்னிப்பு நாளை முன்னிட்டு சமணர்களின் வாழ்க்கை நெறி குறித்த கண்காட்சி நடந்தது.
கண்காட்சியில் சமணர்களின் புண்ணிய தலங்கள், போதனைகள், வழிபாட்டு முறைகள், சின்னங் கள் குறித்த புகைப்படங்கள், காணொலிகள் இடம் பெற்றன. புவன் புஷன் விஜய் ஜி மகாராஜ் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.