உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம்: 5 டன் பூமாலைகள் வழங்கல்

திருப்பதி பிரம்மோற்சவம்: 5 டன் பூமாலைகள் வழங்கல்

திருச்செங்கோடு: ஆந்திரா மாநிலம், திருப்பதியில் அருள்பாளிக்கும் ஸ்ரீமன்  நாராயணனுக்கு ஆண்டுதோறும் நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு,  நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டில் இருந்து, திருமலை திருப்பதி ஸ்ரீமன்  நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில் பூமாலைகள்  அனுப்பப்படுகின்றன.

அதன்படி, இந்தாண்டு விழாவுக்கு, திருச்செங்கோடு அகரமஹால் மண்டபத்தில், 5 டன் பூக் களை மாலைகளாக தொடுக்கும் நிகழ்ச்சி நேற்று 29ல் நடந்தது. பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு சாமந்தி பூக்கள், தாமரை, மரிக்கொழுந்து உள்ளிட்ட பல வண்ண பூக்களை, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி உள்பட, 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாலைகளாக தொடுத்தனர்.

மாலைகளோடு கரும்பு, தென்னம்பாளை, தென்னங் குருத்து, இளநீர், பாக்கு குலை, மாங் கொத்துகள், 10ஆயிரம் ரோஜா செடிகள் ஆகியவையும், சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருமலை க்கு அனுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !