உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா துவக்கம்

கிருஷ்ணகிரி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள, லட்சுமி நாராயண சுவாமி  கோவிலில், தசரா திருவிழா கடந்த, 28ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.  

இதையொட்டி நேற்று 29ல் காலை முதல், தொடர்ந்து ஒன்பது நாட்களும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

மேலும் அக்., 8 இரவு லட்சுமி நாராயண சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 9 காலை, 7:00 மணிக்கு காந்திசிலை அருகில், அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் வன்னிமரம் வெட்டு தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. 10 இரவு, 10:00 மணிக்கு, கொடி இறக்கத்துடன் விழா நிறை வடைகிறது. விழா ஏற்பாடுகளை பருவதராஜகுல சமுதாய மக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !