ஈரோடு கருட சேவைக்கு கட்டளை: கோவில் நிர்வாகம் அழைப்பு
ADDED :2233 days ago
ஈரோடு: கருட சேவைக்கு கட்டளை செலுத்த விரும்புவோருக்கு, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி தேர்த்திருவிழா அக்., 1ல் நாளை தொடங்குகிறது. அக்.,7ல் திருக்கல்யாண உற்சவம், 8ல் தேரோட்டம் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, நாளை (அக்., 1ல்) தொடங்கி, 10 நாட்களுக்கு இரவில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
அன்னபட்சி, சிம்மம், அனுமன், கருடன், யானை, குதிரை, சேஷவாகனம் என, தினமும் ஒரு வாகனத்தில், கஸ்தூரி அரங்கநாதர் பவனி வருவார். இதில் கருடசேவை, கோவிலில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இதில் பங்கேற்று கட்டளை செலுத்த விரும்பும் பக்தர்கள், அதற்கான கட்டணத்தை கோவில் அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்யலாம் என, செயல் அலுவலர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.