உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை சிருங்கேரி மடத்தில் நவராத்திரி துவக்கம்

சிவகங்கை சிருங்கேரி மடத்தில் நவராத்திரி துவக்கம்

சிவகங்கை : சிவகங்கை கோகுலேஹால் தெரு சிருங்கேரி சங்கரமடத்தில்  நவராத்திரி விழா நேற்று 29ல் துவங்கி, அக்.,8 வரை நடைபெற உள்ளது. விழாவை  முன்னிட்டு தினமும் மாலை லலிதா சகஸ்ரநாமம், லட்சார்ச்சனை நடைபெறும்.  துவக்க நாளான நேற்று 29ல் சாஸ்திரிகள் கணபதி, வினோத், ஈஸ்வரன் ஆகியோர்  ஆவகணத்துடன் லட்சார்ச்சனையை துவக்கி வைத்தனர். அக்.,8 அன்று காலை  கணபதி, லலிதா, துர்க்கா ஹோமம், தம்பதி, சுவாசினி, கன்யா பூஜை,  தீபாராதனை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கவுரவ மேலாளர் ராமசாமி செய்து  வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !