உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பாகூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பாகூர்: பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம், அங்காள பரமேஸ்வரி அம்மன்  கோவிலில் நேற்றுமுன்தினம் 28ல், அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம்  நடந்தது.

அதனையொட்டி அம்மனுக்கு, பால், தயிர், தேன், சந்தனம், இளநீர்  உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, இரவு  8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில்  அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். 9:00 மணிக்கு தீபாரா தனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு  பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !