தல்லாகுளம் பெருமாள் கோயில் பிரமோற்சவம்
ADDED :2231 days ago
மதுரை, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் புரட்டாசி பிரமோற்சவ விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இவ்விழாவையொட்டி தினமும் சுவாமியின் பல்வேறு அவதாரம், வீதி உலா நடக்கிறது. இன்று(அக்.,1) காலை கிருஷ்ணாவதாரம், இரவு சிம்மவாகனம், 2ல் ராமர் அவதாரம், இரவு அனுமார் வாகனம், 3ல் கஜேந்திர மோட்சம், இரவு கருடவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.அக்., 4ல் ராஜாங்கசேவை, இரவு சஷேவாகனம், 5ல் காளிங்கநர்த்தனம், இரவு மோகன அவதாரம், இரவு யானை வாகனம், 6ல் சஷேசயனம், இரவு புஷ்பசப்பரம், 7ல் வெண்ணெய்த்தாழி, இரவு குதிரை வாகன புறப்பாடு, 8ல் தேரோட்டம், இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. அக்., 10ல் தெப்ப உற்ஸவம், 11ல் உற்ஸவ சாந்தி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா செய்துவருகின்றனர்.