வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி பூஜை
ADDED :2299 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு இரண்டாம் நாளான நேற்று பகல் 1:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை அம்பிகை ஸ்தோத்திரம், நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது.
மூலவர் வராகி அம்மனுக்கு பெண்கள் மூலம் அம்மியில் அரைக்கப்பட்ட பச்சை விரலி மஞ்சளால் காப்பு இடப்பட்டது.பின் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட கொலு வைக்கப்பட்டது. பூஜைகளை மங்களப்பட்டர் செய்திருந்தார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.