உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் நவராத்திரி விழா கொலு கண்காட்சி

கூடலுார் நவராத்திரி விழா கொலு கண்காட்சி

கூடலுார்: நவராத்திரி விழாவை முன்னிட்டு கூடலுார் கூடல் சுந்தரவேலவர்  கோயிலில் கொலு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

நவராத்திரி விழா முதல்நாளான நேற்றுமுன்தினம் (செப்., 29ல்)   துர்க்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில்  ஏராளமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது.சிறப்பு அபிஷேகம்,  ஆராதனையுடன் துவங்கிய விழாவில் ஏராளமான பெண்கள்  கலந்து கொண்டனர்.

சுருளிமலை - பழநி மலை பாதயாத்திரை குழு பெண்கள் பஜனைப் பாடல்கள்  பாடினர். நவராத் திரி விழாவின் சிறப்புகள் குறித்து பாராயணம் செய்யப்பட்டது.    ஏற்பாடுகளை கோயில் நிர் வாகத்தினர் செய்திருந்தனர்.

* பெரியகுளம் ஞானாம்பிகா சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் நவராத்திரி  விழா நடந்து வருகிறது. நேற்று (செப்., 30ல்) இரண்டாம் நாளையொட்டி மூலவர்  ஞானாம்பிகை அம்மன் மூகாம்பிகை அலங்காரத்தில் காட்சியளித்தார். காளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.  கோயில் வளாகத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள்  தரிசித்தனர்.  பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேஷ் செய்து  வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !