உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்குடி புனித மிக்கேல் அதிதுாதர் ஆலய தேர்பவனி விழா

செங்குடி புனித மிக்கேல் அதிதுாதர் ஆலய தேர்பவனி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: செங்குடி புனித மிக்கேல் அதிதுாதர் ஆலய தேர்பவனி விழா நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் அதிதுாதர் ஆலய விழா செப்.,20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முக்கிய விழாவான தேர்பவனி விழா நேற்று முன்தினம் (செப்., 29ல்) இரவு நடந்தது.

முன்னதாக பங்கு பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் திருவிழா திருப்பலி நிறைவேற்றினார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல் அதிதுாதர், தேவ மாதா, ஏசு, சவேரி யார் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின் மாலையில் கொடியி றக்கத்தை முன்னிட்டு தேர்பவனி விழா நடைபெற்றது.

விழாவில் கிராம தலைவர் அருள்சூசை, செயலாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர் மிக்கேல் ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !