நல்லாத்துார் பெருமாள் கோவிலில் விழா
ADDED :2231 days ago
புதுச்சேரி:நல்லாத்துார் பெருமாள் கோவில் நவராத்திரி விழாவில், சுவாமி காளிங்க நர்த்தன அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏம்பலம் அடுத்த நல்லாத்துாரில் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நவராத்திரி விழா, கடந்த 29ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று, மச்ச அவதார அலங்காரத்திலும், இரண்டாம் நாளன்று, வெண்ணைத் தாழி அலங்காரத்திலும் சுவாமி அருள்பாலித்தார்.நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான நேற்று, சுவாமிக்கு காளிங்க நர்த்தன அலங்காரம் செய்யப்பட்டு, அம்மனுடன் உள்புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.