உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்திக்குப்பம் பஜனைக்கூடத்தில் திருக்கல்யாண உற்சவம்

வைத்திக்குப்பம் பஜனைக்கூடத்தில் திருக்கல்யாண உற்சவம்

 புதுச்சேரி:வைத்திக்குப்பம், வெங்கடாஜலபதி பஜனைக் கூடத்தில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


வைத்திக்குப்பம், வெங்கடாஜலபதி பஜனை கூடம் சார்பில், 56ம் ஆண்டு புரட்டாசி மாத உற்சவம், கடந்த 18ம் தேதி கோவிந்த நாம சங்கீர்த்தன பஜனை யுடன் துவங்கியது, 21ம் தேதி திருவந்திபுரம் கோவில் மலைமண்டல பெருமாள் பஜனையும், 28ம் தேதி திருப்பாவை திருக்கல்யாண உற்சவமும், இரவு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.காலை திருப்பாவை நிகழ்ச்சியும் மாலை திருக்கல்யாணம் வரிசை வரவேற்பு, மாலை மாற்றுதல், பூச்செண்டு விளையாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு திருக்கல்யாணம் நடந்தது.வரும் 5ம் தேதி ரத உற்சவமும், 6 ம் தேதி ஆண்டாள் குழுவினரின் அவங்க கோலாட்டமும், 11ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 13ம் தேதி திருப்பதி பாதையாக நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !