கச்சிராயிருப்பு வடக்குவாச்செல்லியம்மன் கோயிலில்பொங்கல் விழா
ADDED :2300 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு வடக்குவாச்செல்லியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் உற்ஸவம் இரண்டு நாட்கள் நடந்தன.
முதல் நாள் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். 2வது நாள் பொங்கல் வைத்து சக்தி கிடா வெட்டி வழிபாடு செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.