உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் உண்டியலில் ரூ.19 லட்சம் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் உண்டியலில் ரூ.19 லட்சம் காணிக்கை

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 19 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு, நாமக்கல் மட்டுமின்றி, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். அதேபோல், நேற்று, உதவி ஆணையர்கள் ரமேஷ், பிரகாஷ், தக்கார் குமரேசன், ஆய்வாளர் அம்சா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை பணம், பக்தர்கள் மற்றும் வங்கியாளர்கள் மூலம் எண்ணப்பட்டது. அதில், 19 லட்சத்து, 36 ஆயிரத்து, 31 ரூபாய், 17 கிராம் தங்கம், 107 கிராம் வெள்ளி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த, ஆக., 6ல் உண்டியல் திறக்கப்பட்டபோது, 15 லட்சத்து, 26 ஆயிரத்து, 939 ரூபாய், 11 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !