உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை மேற்கு மாம்பலத்தில் சம்பூர்ண மகா சண்டி ஹோமம்

சென்னை மேற்கு மாம்பலத்தில் சம்பூர்ண மகா சண்டி ஹோமம்

சென்னை:நவராத்திரியை முன்னிட்டு, மேற்கு மாம்பலம் சங்கர மடத்தில், சம்பூர்ண மகா சண்டி ஹோமம், 6ம் தேதி நடக்கிறது.

பெரும்பாக்கம், ’அமா சர்வ மங்களா’ மற்றும் கீழ்க்கட்டளை, வித்யா மகா காளி பீடத்தின் சார்பில், நவராத்திரி விழாவையொட்டி, துர்காஷ்டமி அன்று, சம்பூர்ண மகா சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது.சென்னை, மேற்கு மாம்பலம், காஞ்சி சங்கர மடத்தில், 6ம் தேதி, காலை, 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. அதை தொடர்ந்து, கலச ஸ்தாபனம், லலிதா சகஸ்ரநாமம், திரிசதி, கட்கமாலா அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது.

காலை, 8:00 மணிக்கு மகா சங்கல்பம் நடக்கிறது. அதை தொடர்ந்து, தேவி மகாத்மிய, துர்கா ஸப்தசதி பாராயண ஸஹித சம்பூர்ண மகா சண்டி ஹோமம் நடக்கிறது.மதியம், 1:00 மணி முதல் மகா பூர்ணாஹுதி, வஸோத்தாரா, தீபாராதனை, கலசாபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, அஷ்டாதச புஜ விஸ்வரூப மகா பிரத்யங்கரா தேவி வீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !