உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் கந்த சஷ்டி தரிசனம் அனுமதிக்க வழக்கு

மதுரையில் கந்த சஷ்டி தரிசனம் அனுமதிக்க வழக்கு

மதுரை:மதுரை ஒத்தக்கடை ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு, அங்கபிரதட்சணம் செய்ய வரும் 150 பக்தர்களை, கந்த சஷ்டியின்போது 6 நாட்களும் சுவாமியை இலவச தரிசனம் செய்ய டோக்கன் வழங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு,’கோயில் செயல் அலுவலர் அக்.,15 ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !