உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவத் கீதை பாடம்: கிரண்பேடி வரவேற்பு

பகவத் கீதை பாடம்: கிரண்பேடி வரவேற்பு

சென்னை:”புதுச்சேரி மாநிலம் முழுவதிலும், ’டிஜிட்டல்’ பேனர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது,” என, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:புதுச்சேரி மாநிலத்தில், டிஜிட்டல் பேனர் கள் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என, உத்தரவிட்டுள்ளேன். பேனர்கள் அகற்றும் முயற்சியில், புதுச்சேரி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.’தமிழகத்தில், டிஜிட்டல் பேனர்களை வைக்கக் கூடாது’ என்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். சென்னை அண்ணா பல்கலையின், தத்துவ படிப்பில், பகவத் கீதையை இணைத்திருப்பது வரவேற்புக் குரியது. பகவத் கீதை, ஒரு மதத்தை பற்றியது அல்ல; மனிதனுடைய வாழ்வாதாரம் மற்றும் புரிதலை தெரிந்து கொள்ள, அது உதவும்.பகவத் கீதை என்பது, அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. இதை, ஒரு மதத்துடன் மட்டும் குறிப்பிட்டு கூறுவது தவறு.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !