நவராத்திரி விழா: மதுரையில் இந்திரா சவுந்தர்ராஜன் பேச்சு
ADDED :2229 days ago
மதுரை: ”நவராத்திரி விழா வீட்டை கோயிலாக மாற்றும்,” என, எழுத்தாளர் இந்திரா சவுந்தர் ராஜன் தெரிவித்தார்.மதுரை காஞ்சி காமகோடி பீடத்தில் அனுஷ வைபவம் நடக்கிறது. ஸ்ரீமடம் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ’குரு மகிமை’ என்ற தலைப்பில்எழுத்தாளர்
இந்திரா சவுந்தர்ராஜன் பேசியதாவது: நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் அம்பிகை யை ஆராதித்து அருள் பெற வேண்டும். நவராத்திரி விழா வீட்டை கோயிலாக்கும். மகா பெரியவர் பூஜை செய்யும் சந்திரமவுலீஸ்வரர் சுவாமியை ஹர்ஷவர்தனன் என்ற மன்னர் பெருமையாக பாடியுள்ளார் என்றார்.
ஏற்பாடுகளை மடம் நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஸ்ரீவத்சன், வெங்கடரமணி, ஜோதிவேல், கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ஜனார்த்தனன் செய்தனர். பொருளாளர் ஸ்ரீகுமார் நன்றி கூறினார்.