உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கிராம கோவிலில் நவராத்திரி விழா

உடுமலை கிராம கோவிலில் நவராத்திரி விழா

உடுமலை:பூளவாடி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா நடக் கிறது. சக்தி அழைத்தல், கொலு வைத்து, வழிபடுதலுடன் விழா துவங்கியது.

தொடர்ந்து, நாள்தோறும், மாலையில், அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை மற்றும் பிரசாத வினியோகம் நடக்கிறது. வரும், 7 ம்தேதி, காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது, காலை, 10:00 மணிக்கு அம்பாளுக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

கோவிலில், தேவாங்கர் குல அறக்கட்டளையின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில், திருமஞ்சனம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள், அக்., 8 ம்தேதி, திருச்சப்பரம் சந்தைப்பேட்டை சென்று, அம்பு சேவை செய்தல், மற்றும் மஞ்சள் நீராடுதல், மதியம் அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !