கடலுார் ராகவேந்திரர் கோவிலில் உபன்யாசம்
ADDED :2229 days ago
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் சுவாமி பிருந்தாவனத்தில் நவராத்திரி மற்றும் மத்வ ஜெயந்தி விழாவில் தினம் உபன்யாசம் நடந்து வருகிறது.
கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் நவராத்திரி மற்றும் மத்வ ஜெயந்தி விழா கடந்த 29ம் தேதி துவங்கி, வரும் 8ம் தேதி வரை நடக்கிறது.இதில் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ’மகாபாரதம் காட்டும் பண்பாளர்கள்’ என்ற தலைப்பில் தொடர் உபன்யாசம் நடந்து வருகிறது.
வேபத்துார் வித்வான் கிருஷ்ணமூர்த்தி தினமும் உபன்யாசம் செய்து வருகிறார். நேற்று (அக்., 3ல்) நிகரில்லா வீரன் நகுலன் என்ற தலைப்பிலும், இன்று(அக்., 4ல்) தெய்வம் அன்ன சகாதேவன் என்ற தலைப்பிலும் உபன்யாசம் நடக்கிறது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.