பாரியூர் வகையறா கோவில் உண்டியல்கள் திறப்பு: ரூ.11.59 லட்சம் காணிக்கை
ADDED :2228 days ago
கோபி: பாரியூர் வகையறா கோவில்களின் உண்டியல்களில், 11.59 லட்சம் ரூபாய் காணிக்கை யாக கிடைத்தது. கோபி, பாரியூர், கொண்டத்துகாளியம்மன் வகையறா கோவில்களின், 10 உண்டியல்கள், அறநிலையத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ், செயல் அலுவலர் நாகராஜ் முன்னிலையில், நேற்று (அக்., 3ல்) திறக்கப்பட்டன.
தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் தங்கம், 79 கிராம், வெள்ளி, 78 கிராம், அமெரிக்க டாலர் நோட்டு ஒன்று, பணமாக, 11.59 லட்சம் ரூபாய் கிடைத்தது. துறை ரீதியாக, கோபி கார்ப்பரேசன் வங்கியில், அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.