உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி பூஜைக்காக சதுரகிரியில் பக்தர்கள் அனுமதி

நவராத்திரி பூஜைக்காக சதுரகிரியில் பக்தர்கள் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார் : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் நவராத்திரி பூஜைக்காக இன்று முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபடுவார்கள் என ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறை அறிவித்துள்ளது. கடந்த அக்.29 ஞாயிறு இரவு பெய்த மழையின் காரணமாக, சதுரகிரியில் , பக்தர்கள் மலையேற தடை விதிக்கபட்டிருந்தது. தற்போது கோயிலில் நவராத்திரி பூஜைகள் நடப்பதை முன்னிட்டு, பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்திருந்தன. மழை குறைந்ததால் ஓடைகளில் நீர்வரத்து நின்று விட்டது. இதனால் இன்று (அக்.5) முதல் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !