திருப்பதி பிரம்மோற்சவம்: கருட சேவை கோலாகலம்
ADDED :2540 days ago
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் பெருமாள் கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலையில், ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது, ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது. அதன்படி, திருமலையில், வருடாந்திர பிரம்மோற்சவம் செப்.,30ல் கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்று (அக்.,4ல்) நடைபெற்றது. ஐந்தாம் நாளான நேற்று இரவு பெருமாள் கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.